விஸ்வரூபம் படத்தை 2 வாரங்களுக்கு திரையிட தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது குறித்து திரை பிரபலங்கள் ட்விட்டரில் கமலுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர். விஸ்வரூபம் படம் வரும் 25ம் திகதி தியேட்டர்களில் ரிலீஸாவதாக இருந்தது. இந்நிலையில் விஸ்வரூபம் படத்தை 2 வாரங்களுக்கு திரையிட தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கமலின் விஸ்வரூபத்திற்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து கொண்டிருக்கிறது.
இந்த படத்திற்கு முஸ்லிம் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவத்துள்ள நிலையில் தான் தமிழக அரசு தடை விதித்துள்ளது. சென்சாரைத் தாண்டி வந்த படத்திற்கு அரசு தடை விதித்திருப்பது குறித்து சினிமா நட்சத்திரங்கள் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளன. அவர்கள் கமலுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர். திரையுலகினர் தவிர்த்து ஆன்மீக குருவான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரும் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அவரின் ட்வீட்: இந்தியா சுதந்திர நாடு. கமல் திறமையானவர். அவரது கருத்தை தெரிவிக்கும் உரிமை அவருக்கு உண்டு என்று கூறியுள்ளார்.
விஸ்வரூபத்திற்கு அரசு தடை விதித்தது குறித்து அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். நாம் எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்? சென்சார் என்ற அமைப்பை கலைப்போம் என்று ட்வீட் செய்துள்ளார் குஷ்பு
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி சென்சார் போர்டு அனுமதி அளித்த பிறகு எங்கிருந்து இந்த தடை உத்தரவு வந்துள்ளது? மலேசியாவில் உள்ள மக்கள் மற்றும் வினியோகஸ்தர்களிடம் பேசினேன். முஸ்லிம் நாடான அங்கு விஸ்வரூபம் படத்தை சென்சார் அனுமதித்து இன்று திரையிடுகிறார்கள்.
ஓ மை காட், எதற்காக விஸ்வரூபத்திற்கு தடை? சாரி, நான் இப்போது தான் செவ்வாய் கிரகத்தில் இருந்து திரும்பியுள்ளேன். கமல் சாருக்கு எப்பொழுது பார்த்தாலும் பிரச்சனை. இது கற்பனை படம் என்பதை மக்கள் உணர வேண்டும்.
விஸ்வரூபத்திற்கு தடை விதித்திருப்பது தமிழ் சினிமாவுக்கு தமிழக அரசு கொடுத்துள்ள அடி. எப்படி நாம் மாற்றத்தை ஏற்படுத்துவது?
நீங்க தடை போட்டாலும் அவரால் முடியும். ஒவ்வொரு தடையும் விஸ்வரூபத்தையும், கமல்ஜியையும் பெரிதாக்குகிறது.
விஸ்வரூபத்திற்கு 15 நாட்கள் தடை!??? 15 நாட்களில் எதை மாற்றப் போகிறார்கள்?? இது 15 நிமிட புகழுக்காகவா?? ஏமாற்றம் அளிக்கிறது என சொலமன் தெரிவித்துள்ளார்.
இப்போது தான் பிடி டிவியைப் பாத்தேன். விஸ்வரூபம் ரிலீஸ் 15 நாட்கள் தள்ளிவைத்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.- தனஞ்செயன் கோவிந்த்
விஸ்வரூபம் பற்றி என்ன தான் நடக்கிறது. தயவு செய்து படத்தையும், சீப்பான அரசியலையும் கலக்காதீர்கள். கலாச்சார மாபியாவுக்கு ஒரு முடிவு வர வேண்டும். - லக்ஷ்மி மஞ்சு
கமல் சார் நீதிமன்றத்தில் போராடுவார். அதன் பிறகு அது நீதியின் கையில் உள்ளது. பொறுத்திருந்து நடப்பதைப் பார்ப்போம்...கமல் சாரின் வார்த்தைகள் இதோ...விஸ்வரூபம் சீக்கிரமாக ரிலீஸாகி பெரிய ஹிட்டாக விரும்புகிறேன். - தயாநிதி அழகிரி
Post a Comment