Ads (728x90)




பெயர்- ஐதுறுஸ் கனுன் நிஸா 

முகவரி- குட்டிக்கராச்சி,கிண்ணியா

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது- 2012-12-26

பிரசவ சத்திரசிகிச்சை நடந்தது 2012-12-28

வைத்தியசாலைக்கு சென்றதன் நோக்கம் - வலது கையில் கடுப்பு ஏற்பட்டமைக்கு மருந்து எடுப்பதற்காக

கடந்த டிசம்பர் மாதம் 26ம் திகதி வலது கையில் நோவு ஏற்படுவதாக கிண்ணியா தள வைத்தியசாலைக்கு சென்ற 06 பிள்ளைகளின் தாயாரான ஐதுறுஸ் கனுன் நிஸா இன்று பிரசவ சத்திர சிகிச்சை செய்த நாள் முதல் சுயநினைவற்று கோமா நிலையில் வைத்தியசாலை கட்டிலில் உறங்கிக்கொண்டிருப்பதை நேரில் கண்டு அதிர்ச்சி அடைந்த ஒருவனாக இந்த தகவல்களை உங்களுடன் பரிமாறக்தொடங்குகின்றேன்.

சுயநிணைவில் உள்ள கனுன் நிஸாவின் வீட்டுக்குச்சென்றேன். கணவரான மனாப் உடம்பிலிருந்து வியர்வை வெளியேறிய நிலையில் தம்பி இப்போதுதான் நான் வந்தேன். என்ட ஜீவியம் இப்படி இருக்கும் நிலையில் எனது பிறந்த பிள்ளைக்கு கூட உம்மாட பாலைகுடிக்க முடியாத நிலைக்கு அல்லாஹ் ஆக்கி விட்டான். எல்லாத்துக்கும் அல்லாஹ் போதுமானவன்! அந்நோயாளியின் 5 மாதக்குழந்தையான ( மெனுன் ஹனி ) தொட்டிலில் அழுத வண்ணம் இருப்பதை அவதானித்தேன். இப்படியானதொரு கஸ்டம் யாருக்கும் வரக்கூடாது என நான் நினைத்தேன். காலை கொல்லி எடுப்பதற்காக காட்டுக்குச்சென்று கஸ்டத்தில் வந்தும் எனது பிள்ளை அழுவதை பார்க்கும் போது கவலையாக இருக்கின்றது.06 பிள்ளையையும் நோமலாக பெத்த என்ட மனைவிக்கு இந்த ஒப்ரேசனுக்கு பிறகுதான் இப்படி நடந்தது. யாரிடம் சொல்வது

இருந்தபோதிலும் எனது கஸ்ட நிலையை நேரில் வந்து பார்த்த சட்டத்தரணிகளான எம்.எச்.எம்.ஹம்ஸா மற்றும் ஏ.முகம்மட் பாருக் ஆகியோரிடம் எனக்கு நீதியை பெற்றுத்தருமாறு கூறினேன். அவர்களாவது நீதியை பெற்றுத்தருவார்களா? என எதிர்பார்த்த வண்ணம் இருக்கின்றேன் எனவும் மனாப் தெரிவித்தார்.

கிண்ணியா,குட்டிக்கராச்சி பகுதியில் 06 பி;ள்ளைகளை சுகப்பிரசவத்தில் நோமல் டிலுவரியில் பெற்றெடுத்த மனைவி பிரசவ நாளைக்கு 08 நாட்கள் இருந்தபோதிலும் வீட்டுக்கு பக்கத்திலுள்ள பெண்னுடன் நடந்து சென்றவள் மருந்தெடுப்பதற்காக ! அன்று 26ம் திகதி கிண்ணியா தள வைத்தியசாலையில் வலது கையில் கடுப்பு ஏற்படுவதாக வைத்தியரிடம் கூறியவேளை பிரசவ விடுதியில் சேர்க்கப்பட்டார். நான் அன்றைய நாள் யாழ்ப்பாணத்தில் தொழில் ரீதியாக சென்றிருந்தேன் எனவும் தெரிவித்தார். மனைவியை பார்ப்பதற்காக பிள்ளைகளுடன் வைத்தியசாலைக்கு வந்த நேரம் எனது மனைவி ஒப்ரேசன் அறையில் இருப்பதாக கேள்விப்பட்டேன். மனைவியை பார்க்கவும் இல்லை.என்னிடம் கையொப்பம் வைக்குமாறு தாதியர் கூறினார். மனைவியை அந்த நேரம் காணவில்லை! எனவும் தெரிவித்தார். மனைவியை பார்ப்பதற்காக காத்திருந்தும் பார்க்க முடியவில்லை. இரவாகிவிட்டது வீட்டில் மற்றவர்களை பார்த்துக்ககொள்வதற்காக வந்துவிட்டேன். எனவும் மனாப் கூறினார்.

அத்துடன் பக்கத்து கட்டிலில் இருந்த பெண்னொருவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார். ஒப்ரேசனுக்கு பிறகு தன்னிடம் தேனீர் கேட்டதாகவும் பின்னர் அங்குள்ள வைத்தியர் கொடுக்க வேண்டாம். பத்து மணித்தியாலத்திற்கு பிறகுதான் கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இர்பானா எனும் பெண் வைத்தியர் சத்திரசிகிச்சை செய்த பின்னர் வீ.ஓ.ஐpக்கு தொலைபேசி மூலம் சொன்னதாகவும் அதனையயடுத்து அரை மணி நேரத்திற்குள் வீ.ஓ.ஐp வந்ததாகவும் தெரிவித்த அவர் ஒப்ரேசனில் ஏதோ பிழை நடந்திருக்கின்றது. எனவும் தெரியமுடிந்தது எனவும் கூறினார்.

அதே வேளை மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்லப்படவுள்ளதாக தெரிவித்த வேளை சகோதரர்களுக்கு தெரியப்படுத்தினேன். எனவும் பக்கத்து கட்டில் பெண் கூறினார்.

தங்கையை மட்டக்களப்பு அனுப்புவதாக தெரியவந்ததையடுத்து ஹைறுன் நிஸா ஆகிய நான் வைத்தியசாலைக்கு வந்தேன்.அப்போது தங்கை அம்பியுலன்ஸ் வண்டியில் இருந்தார். நோயாளியான எனது தங்கையை ஏற்றி பல மணி நேரம் அம்பியுலன்ஸ் வண்டிக்கு டீசல் இல்லை என கூறப்பட்டது. அதன் பிறகு இர்பானா டொக்டர் காசி கொடுத்தவுடன் வாகனம் புறப்பட்டது.

மட்டக்களப்பு சென்று மீண்டும் கிண்ணியா வைத்தியசாலைக்கு கொண்டு வந்தார்கள்.அன்று தொடக்கம் இன்று வரை தங்கையுடன் வைத்தியசாலையில் இருக்கின்றேன்.

எனது தங்கையை பார்ப்பதற்காக வைத்தியசாலை ஊழியர்கள் அனைவரும் வந்தார்கள் அப்போது இர்பானா டொக்டரும் வந்தார். கட்டிலில் கையை வைத்துக்கொண்டு என்ன செய்ய இவருடைய சூழ்நிலை இப்படி நான்கு தரம் கரன்ட் போய் விட்டது. அதோட இரண்டு தரம் ஹாட் எடக் வந்துவிட்டது என்று இர்பானா டொக்டர் சொல்லி அழுதார். ஒப்ரேசனில் தான் பிழை ஏற்பட்டுள்ளது எனவும் தெரியவருகின்றது.

எனது குடும்ப கஸ்ட நிலமைக்கு மத்தியில் தாய் பல மாதங்களாக வைத்தியசாலையில் இருப்பதாகவும் நான் பாடசாலைக்கு சென்று பின்னேரம் வைத்தியசாலையில் பணிவிடை பார்த்து வருவதாகவும் தனது தாயை சுகப்படுத்தி தருமாறு வேண்டுவதாகவும் மூத்த மகள் அழுத வண்ணம் கூறினார்.

எனவே இப்படியான சம்பவம் நடப்பதற்கு காரணம் வைத்தியர்கள் தனியார் மருத்துவமனைக்கு முன்னுரிமை கொடுத்து வைத்தியசாலையில் நோயாளர்கள் விடயத்தில் அக்கறையின்றி செயற்படுவதாகும். பாதிக்கப்பட்டவரின் குடும்ப நிலை மிகவும் பாதிப்புக்களையும் மனக்கவலையையும் தோற்றுவிக்கின்றது. கொல்லி வெட்டி ஜீவியத்தை களிக்கும் நபரின் மனைவி இப்படியானதொரு கவலைக்கிடமாக உள்ளதை நேரில் பார்த்தால் உங்களுக்கும் வைத்தியர்களின் கவனயீனம் தென்படும்.

குறிப்பு - இதுகுறித்து சம்பந்தப்பட்ட வைத்தியசாலை நிர்வாகம் உரியமுறைப்படி விளக்கம் தருமாயின் நிச்சயம் அதனை பதிவுசெய்வோம்.
Next
This is the most recent post.
Previous
Older Post

Post a Comment