Ads (728x90)

முஸ்லிம்களுக்கு எதிரான பிரசாரத்தை கட்டுப்படுத்த ஜனாதிபதியிடம் கோரிக்கை

முஸ்லிம்களுக்கு எதிராக நாட்டில் மேற்கொள்ளப்படும் பிரச்சார நடவடிக்கைகளை கட்டுப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெள்ளி அரங்கத்தினாலேயே இந்த கோரிக்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. வெள்ளி அரங்கத்தின் சார்பாக ஜயந்த தனபால மற்றும் பேராசிரியர் சவித்திரி குணசேகர ஆகியோர் கையொப்பமிட்டு அனுப்பியுள்ளனர்.

குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"இந்த பிரசாரங்களினால் பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டுள்ளதுடன் சுவரொட்டிகள் மற்றும் நவீன ஊடகங்களில் முஸ்லிம் எதிர்ப்பு பிரசாரங்கள் கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. இது தொடர்பாக நீங்களும் அறிந்திருபீர்கள். இந்த பிரச்சினையை உடனடியாக கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கின்றோம்".

இந்த கடிதத்தின் பிரதிகள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, பொலிஸ் மா அதிபர், சட்டமா அதிபர் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

ஜயந்த தனபால, பேராசிரியர் சவித்திரி குணசேகர, வண. டுலிப் டி சிகேரா, கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன, ஜாவிட் யூசுப் மற்றும் சி.ஜே. வெலியமுன உள்ளிட்ட பல புத்திஜீவிகளை உள்ளடக்கியதே வெள்ளி அரங்கமாகும்.

Post a Comment