Ads (728x90)

Photo: 12 வயதில் புரோகிராம் ஸ்பெஷலிஸ்ட்!

பள்ளிக்கு பஸ்ஸில் செல்லும் குழந்தை எந்த இடத்தில் இருக்கிறது என்பதை மொபைல் போன் மூலம் தெரிந்து கொள்வதற்கான தொழில்நுட்பத்தை உருவாக்கியிருக்கிறார் 7-ஆம் வகுப்பு மாணவர் அர்ஜுன். இதற்காக அமெரிக்காவில் உள்ள எம்ஐடி என்று அழைக்கப்படும் ‘மாசாசூசெட்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி’ கல்வி நிறுவனம் நடத்திய சர்வதேசப் போட்டியில் (MIT APP Contest) முதல் பரிசைப் வென்று, தமிழகத்திற்கு பெருமை சேர்த்திருக்கிறார் சூரப்பேட்டை, வேலம்மாள் வித்யாஸ்ரமம் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவரான அர்ஜுன். ‘ஈஸி ஸ்கூல் பஸ் லொக்கேட்டர்’ (Ez School Bus Locator) என்ற அப்ளிகேஷனை வடிவமைத்ததற்காக டேப்லெட்டும் சான்றிதழும் அவருக்கு கிடைத்துள்ளது.

“ஒன்றரை மாதங்களுக்கு முன்பு பள்ளியிலிருந்து மாலை 4.45 மணிக்கு வரவேண்டிய ஸ்கூல் பஸ் 6 மணி ஆகியும் வரவில்லை. அன்று கன மழை. பள்ளியைத் தொடர்புகொண்டால் 4 மணிக்கெல்லாம் பஸ் கிளம்பிவிட்டது என்றனர். 6.30 ஆகியும் பேருந்து வரவில்லை. பயந்துகொண்டிருந்தேன். ஒருவழியாக 6.45 மணிக்கு பஸ் வந்தபின்புதான் எனக்கு உயிரே வந்தது. அன்றுதான் இப்பிரச்சினைக்குத் தீர்வு கண்டால் என்ன என்று விவாதித்தோம். அப்போது உருவானதுதான் இந்த ஈஸி ஸ்கூல் பஸ் லொக்கேட்டர் அப்ளிகேஷன்” என்கிறார் அர்ஜுனின் அம்மா இந்திரா.

“கோச்சிங் ஏதும் செல்லாமலேயே விஷூவல் பேஸிக் புரோகிராமை அர்ஜுனே கற்றுக் கொண்டான். அவனுடைய ஆர்வம் காரணமாக, நாங்களும் எங்களுக்குத் தெரிந்தவற்றை அவனுக்கு சொல்லிக் கொடுத்தோம். ஆண்ட்ராய்டு போன் மூலம் இனி ஸ்கூல் பஸ் எங்கே வருகிறது, எத்தனை மணிக்கு வருகிறது என்பது குறித்த தகவல்களை இவனது கண்டுபிடிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். இதனால், பள்ளியை விட்டு, வீடு வரும் பிள்ளை இன்னும் காணவில்லையே என்று தவித்துக் கொண்டிருக்கும் பெற்றோர்களின் கவலை மறையும்” எனப் பெருமிதத்தோடு கூறினார் சந்தோஷ் குமார்.

“இந்த ஈஸி ஸ்கூல் பஸ் லொக்கேட்டரை வடிவமைப்பதற்காக கூகுள் ஆப்ஸ்களில் ஒன்றான கூகுள் டிஸ்டன்ஸ் மேட்ரிக்ஸ் API, கியூ.ஆர். கோடு (Quick Response Code:QR Code), விஷூவல் பேஸிக், ஜிபிஆர்எஸ் ஆகியவற்றை பயன்படுத்தினேன்.

ஸ்கூல் பஸ்ஸில் பயணிக்கும் மாணவர்களின் ஐ.டி.கார்டில் கியூ.ஆர்.கோடு மூலம் அவர்களது தகவல்களை சேமித்து வைத்திருக்க வேண்டும். ஸ்கூல் பஸ் நடத்துநரிடம் ஆண்ட்ராய்டு போன் இருக்க வேண்டும். பெற்றோர்களிடம் ஆண்ட்ராய்டு போன் அல்லது சாதாரண போன் இருக்க வேண்டும். பள்ளியிலிருந்து பஸ்ஸின் மூலம் வீட்டுக்கு வரும்போது அவர்களது கியூ.ஆர். கோடு அட்டையை பஸ் நடத்துநர் ஸ்கேன் செய்து கொள்வார். இது லாக் இன் ஆகும். பஸ் கிளம்பிய பிறகு பெற்றோர்கள், தங்களது சாதாரண போனிலிருந்து WMC(Where is My child என்பதன் சுருக்கம்) என்று தட்டச்சு செய்து, பஸ் நடத்துனரின் மொபைல் போனிற்கு அனுப்பினால் போதும். பஸ் நடத்துநரிடம் இருக்கும் மொபைல் தானியங்கி முறையில், அம்மாணவர் பஸ்ஸில் இருக்கிறாரா? எந்த இடத்தில் இருக்கிறார்? எவ்வளவு நேரத்தில் இறங்கும் இடத்திற்கு வருவார் என தகவல்களை அனுப்பி விடும். இதுவே ஆண்ட்ராய்டு போனாக இருந்தால் அவர்களுக்கு மேற்குறிப்பிட்ட தகவல்களுடன் மேப் மற்றும் காட்சி வடிவில் தகவல்கள் கிடைக்கும். இதற்கு மொபைலில் நெட் இருக்க வேண்டியது அவசியம். இதன் பயன்பாட்டை சோதனை செய்து பார்த்து எங்களது பள்ளியில் செயல்படுத்துவதாகச் சொல்லி இருக்கிறார்கள்” என்கிறார் அர்ஜுன்.

இதே முறையில் புதிதாய் இன்னொரு அம்சத்தையும் விரைவில் சேர்க்க இருக்கிறார் அர்ஜுன். அதாவது, ஸ்கூல் பஸ் மேனேஜரிடம் ஆண்ட்ராய்டு போன் மூலம் அவரது பள்ளிப் பேருந்துகள் அனைத்தும் எந்தெந்தத் திசையில், எந்தெந்த இடத்தில் போய்க்கொண்டிருக்கின்றன என்கிற அம்சம்தான் அது. இதனால், குறித்த நேரத்திற்கு பள்ளிப் பேருந்துகள் மாணவர்களை பத்திரமாகக் கொண்டு சேர்க்கிறார்களா என்பதை பள்ளி நிர்வாகம் அறிந்துகொள்ள முடியும். அர்ஜுனின் எதிர்காலத் திட்டம் தலை சிறந்த ரோபோட்டிக் என்ஜினீயர் ஆகவேண்டும் என்பதுதான்.

Post a Comment