Ads (728x90)

'ஹலாலை' வைத்து சமூகங்கள் பிளவுப்படக்கூடாது: மேஜர் ஜெனரல்

-எம்.சுக்ரி

ஹலால் பிரச்சினையை வைத்து சிங்கள முஸ்லிம் சமூகங்கள் பிளவுபட வேண்டிய எந்த அவசியமும் இல்லை. எந்தவொரு சமூகத்திற்கும் அநியாயமிழைக்கப்படுவதை நாம் ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என்று தேசிய இராணுவ புலாய்வுத்துறை பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கபில அன்ரி விதாரண தெரிவித்துள்ளார்.

ஹலால் பிரச்சனையை அதற்காக அரசாங்கம் நியமித்துள்ள உப குழு பார்த்துக்கொள்ளும் அதை வைத்து சமூகங்கள் பிளவுபடக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற முஸ்லிம் பிரதி நிதிகளுடன் இன்று நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த சந்திப்பு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபய தலைமையில் நடைபெறும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் இன்றைய கூட்டத்தில் அவர் கலந்துக்கொள்ளவில்லை.

அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா பிரதி நிதிகள் மற்றும் இஸ்லாமிய பிரச்சார அமைப்புக்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில் பிரதி நிதிகள், மற்றும் வடக்கு கிழக்கு உட்பட நாடு பூராவுமிருந்து கலந்து கொண்ட முஸ்லிம் பிரமுகர்கள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

இதன் போது தொடர்ந்து கருத்து தெரிவித்த தேசிய புலாய்வுத்துறை பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கபில அன்ரி விதாரண, 

"இன்று தோன்றியுள்ள ஹலால் விவகாரத்தை வைத்து சிங்கள முஸ்லிம் சமூகங்கள் பிரச்சினை பட்டுக்கொள்ளப்பட வேண்டிய எந்த அவசியமும் இல்லை.முஸ்லிம்களுக்கோ அல்லது வேறு எந்த சமூகங்களுக்கோ அநியாhம் இடம் பெறுவதை நாம் ஏற்றுக் கொள்ள மாட்டோம். நடக்காத சில விடயங்களை ஊடகங்கள் மிகைப்படுத்தி வெளியிடுகின்றன.

மகர சிறைச்சாலையில் பள்ளிவாயல் மூடப்பட்டது என்று சொல்லப்படுவது பிழையானதாகும். பள்ளிவாயல் உடைக்கப்பட்டது, முஸ்லிம் மாணவிகள் பர்தா அணிவதற்கு தடை விதிக்கப்பட்டது என்றெல்லாம் கூறப்படுவது மிகைப்படுத்தப்பட்ட செய்திகளாகும்.

எனினும் சிறிய சிறிய சம்பவங்கள் நடைபெற்றிருக்கின்றன அவைகளை உடனுக்குடன் பாதுகாப்புத்தரப்பினர் முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர்.பொதுபல சேன அமைப்பின் தலைவர்களுடன் ஐந்து தடவைகள் நாங்கள் பேசியுள்ளோம்.

எங்காவது முஸ்லிம்களுக்கு பிரச்சினை ஏற்படுமாயின் உடனடியாக பாதுகாப்புத்தரப்பினருக்கு அறிவியுங்கள். வீணாக முஸ்லிம்கள் அச்சப்படவேண்டிய எந்த அவசியமும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட முஸ்லிம் முக்கியஸ்த்தர்கள் இன்று முஸ்லிம்களுக்கெதிராக ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை இதன் போது விளக்கி கூறியுள்ளனர்.

முஸ்லிம் பிரதேசங்களில் இன்று ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ் நிலை மற்றும் ஹலால் விவகாரம், முஸ்லிம்கள் தமது மார்க்க கடமையினை செய்வதற்கேற்படுகின்ற தடைகள் போன்றவைகள் தொடர்பாகவும் முஸ்லிம்களின் பாதுகாப்பு போன்றவைகளை விளக்கி கூறியுள்ளனர்.

அத்தோடு முஸ்லிம்கள் சிங்கள மக்களுடன் வாழ்ந்து வரும் ஒற்றுமை ஐக்கியம், மற்றும் முப்பது வருடகால யுத்தத்தின் போது முஸ்லிம்கள் அரசுக்கு வழங்கிய ஆதரவு போன்றவைகள் தொடர்பாகவும் முஸ்லிம் முக்கியஸ்த்தர்கள் இதன் போது எடுத்துக் கூறியுள்ளனர்" என்றார்.

Post a Comment