பிளாக்க்கு அவசியமான 10 டிப்ஸ்
1. சரியான பிளாக்கர் அடைப்பலகை ( Choose Right Template)
உங்கள் வலைப்பதிவின் அடைப்பலகை படிப்பவர்களின் கண்ணுக்கு உறுத்தாத வண்ணம் இருக்க வேண்டும். சிலர் அட்டகாசமாக இருக்க வேண்டும் என நினைத்து மொக்கையான வண்ணத்தில் பயன்படுத்துவர். உதாரணமாக முழுதும் கறுப்பு வண்ணத்தில் இருக்கும். அடர்த்தியான பின்புற வண்ணத்தில் அடர்த்தியான வண்ணத்தில் அமைந்த எழுத்துகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஊதா நிற பின்புறத்தில் சிகப்பு நிற எழுத்துகள் போல அமையக்கூடாது. பார்ப்பவர்களை கவர வேண்டுமெனில் நேர்த்தியான வண்ணக்கலவை வேண்டும்.
2. தேவையில்லாத விட்ஜெட்கள் ( Unnecessary Widgets)
சிலர் பிளாக் முழுவதும் அடைத்து வைத்தது போல வைத்திருப்பார்கள். ஜாவா கடிகாரம், அலங்கார மெனுக்கள், மேலும் எதாவது பாடல் ஒலிப்பது போன்றவைகளை வைப்பதால் தாம் புத்திசாலி என நினைக்கலாம். படிப்பவர்களுக்கு தான் தொல்லையாக இருக்கும். இவை உங்கள் தளத்தை ஒருபோதும் முன்னேற்றப்போவதில்லை. சில வலை உலவிகள் கூட இவற்றோடு சில சமயம் சரியாக ஒத்துப்போவதில்லை
3. மேலெழும்பும் விண்டோக்கள். (Popup windows)
இவை விளம்பரங்களை விட தொல்லையானவை. என்னுடைய பக்கத்தில் உறுப்பினராகு, மின்சந்தாவில் இரு, இந்தப்பக்கத்தை படித்துவிட்டுப்போ என்று கட்டாயப்படுத்தி வரும் மேலெழும்பும் விண்டோக்களால் அடுத்த முறை உங்கள் வலைப்பக்கம் வராமலே போய்விடுவர்.
4. திறக்க எடுத்துக்கொள்ளும் நேரம் (Loading time)
சில வலைத்தளங்களில் எங்கே பார்த்தாலும் விளம்பரமாக இருக்கும். இதனால் வலைத்தளம் திறக்க சில நிமிடங்கள் தாமதமாகிறது. அதிக விளம்பரம் வைப்பதனால் அதிக பணம் கிடைத்து விடாது. பார்வையாளர்களின் கண்ணில் படும்படி சரியான மூன்று இடங்களில் வைத்தாலே போதும். இல்லாவிட்டால் வாசகர்கள் தான் குறைவர்.
5. பார்வையாளர்களின் எண்ணிக்கை தேவையா? ( Hide Counters)
நம் வலைப்பக்கத்தை எத்தனை பேர் வாசித்துள்ளார்கள் என்பதை எதாவது Statcounter, Hitcounter போன்ற விட்ஜெட்கள் மூலம் காட்டுவோம். ஆனால் இது நமது கணக்குக்கு தான் தேவைப்படும். நமது வலைத்தளத்தில் கொஞ்சம் பேர் படித்துள்ளார்கள் என்று இருக்கும் போது பார்ப்பவர்கள் ஒருவேளை இத்தளம் பிரபலம் அல்லாத தளம் என்று நினைத்து விட வாய்ப்புண்டு. எண்ணிக்கையை காட்டாத விட்ஜெட்களை பயன்படுத்தினால் நலம்.
6. தளத்தில் தேட வாய்ப்பு கொடுங்கள் ( Use Searchbox)
சிலரின் தளத்தில் தேடுவதற்கான பெட்டியே இருக்காது. நம் தளத்தில் படிப்பவர்கள் குறிப்பிட்ட கட்டுரையை தேடிப் படிக்க வேண்டும் என்று நினைக்கும்போது வெறுத்துவிடுவார்கள். இதை இணைப்பது எளிய வேலை தான்.
7. தளத்தின் முக்கிய இணைப்புகள் அமைத்தல் (User friendly Navigation)
சிலரின் தளத்தில் எதாவது பதிவுகளை படித்துவிட்டு முகப்புக்கு செல்ல வேண்டும் என்று நினைத்தால் அதற்கான இணைப்பு இருக்காது. அதனால் வெளியேறிவிடலாம் என்று நினைத்து விடுவார்க்ள். அதனால் நமது வலைப்பதிவின் முக்கிய பகுதிகளை நேவிகேசன் மெனுவாக கொடுத்து விடுவது நல்லது. பிறகு கீழிருந்து மேல்பகுதிக்கு (Move to Top) செல்லவும் இணைப்பு கொடுக்கலாம்.தளத்தில் நேவிகேசன் மெனு உருவாக்கம் பற்றிய பதிவு
8. விருதுகளைப்போட்டு குழப்பாதிர்கள். ( Don’t show Awards)
பல வலைத்தளங்களில் கஷ்டப்பட்டு வாங்கிய விருதுகளின் படங்களைபோட்டு இந்தப்பதிவர் தந்தது என்று புகழ்பாடுவார்க்ள். சிலரோ விருதுகளால் தளத்தின் சைட்பாரை நிரப்பியிருப்பார்கள். படிப்பவர்களுக்கு இதெல்லாம் தேவையா நண்பர்களே? தகுதியான இடத்திலிருந்து பெறும் விருதுகளை போட்டுக் கொள்வதில் தப்பில்லை.
9. இடத்தை அடைக்காதிர்கள் ( Don’t Fill screen)
வலைத்தளத்தின் இடத்தை எல்லாம் அடைக்கிற மாதிரி துணுக்குகள், விட்ஜெட்களை போட வேண்டாம். அனிமேசன் படங்களை நிறைய பேர் வைத்திருப்பார்கள். படிப்பவர்க்ளுக்கு நமது கட்டுரையின் மீது தான் கவனம் கொள்ளவைக்க வேண்டும். கொஞ்சம் திரையில் காலியிடமும் இருக்கட்டும்.
10. பயனுள்ள விட்ஜெட்களை சேருங்கள் ( Subscription Widgets)
உங்கள் வாசகர்கள் தளத்தில் படித்தபின்னர் மறந்திராமலிருக்க மின்னஞ்சல் சேவையை அளியுங்கள். Feedburner தளத்திலிருந்து இதனைப்பெறலாம். சைட்பாரில் செய்தித்த்துணுக்குகளை அளிக்கலாம் (News widgets).அப்போது தான் திரும்பவும் உங்கள் தளத்திற்கு வந்து செல்ல வாய்ப்புண்டு. மேலும் பதிவர்களும் நல்ல விசயமுள்ள கட்டுரைகளை எழுதுவதும் வலைத்தளத்திற்கு வாசகர் வட்டத்தை விரிவடையச்செய்யும்.
Post a Comment