தினமும் பலவகையான எழுத்துருக்கள் (Fonts ) பல தளங்களில் இலவசமாக கொடுத்தாலும் அதிகாரப்பூர்வமாக நம் பர்சனல் மற்றும் அலுவலகப்பயன்பாட்டிற்கு பயன்படுத்த வேண்டும் என்றால் கட்டணம் வசூலிக்கின்றனர் ஆனால் ஒரு தளம் முற்றிலும் இலவசமாக Fonts -ஐ தறவிரக்கி நம் பர்சனல் மற்றும் அலுவலக பயன்பாட்டிற்கு பயன்படுத்தலாம் என்கிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு. டிசைனர் மட்டும் இல்லாமல் சாதரணமாக கணினி பயன்படுத்தும் அனைவருமே விரும்பும் ஒன்று என்னவென்றால் அது Fonts என்று சொல்லக்கூடிய எழுத்துருக்கள் தான். அழகான எழுத்துருக்களை தினமும் ஒவ்வொரு அங்கீகாரம் பெறதாதத் தளமாக சென்று தறவிரக்க வேண்டாம். முழுமையான அதிகாரத்துடன் அனைத்துவகையான அழகான எழுத்துருக்களையும் இலவசமாக தறவிரக்க நமக்கு ஒரு தளம் உதவுகிறது.
இணையதள முகவரி : http://www.fontsquirrel.com/
இத்தளத்திற்கு சென்று நாம் அனைத்து வகையான எழுத்துருக்களையும் நொடியில் தறவிரக்கலாம். Comic எழுத்து முதல் Pixel எழுத்துருக்கள் வரை அனைத்துமே தனித்தியாக பிரித்து வகைக்கப்பட்டுள்ளது. தற்போது வெப் டிசைனர்கள் பயன்படுத்தும் Font முதல் DTP யில் பயன்படுத்தப்படும் எழுத்துருக்கள் வரை அனைத்தையும் இலவசமாக இத்தளத்தில் இருந்து தறவிறக்கலாம். குழந்தைகளுக்கான சிறப்பு Fonts முதல் அனைத்து வகையான Fonts Preview உடன் கிடைக்கிறது. நாம் உருவாக்கும் எழுத்துக்கள் எப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்பதை பார்த்து பிடித்த எழுத்துருக்களை எளிதாக் தறவிரக்கலாம். கணினி பயன்படுத்தும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
Post a Comment