நாம் எழுதும் ஒவ்வொரு பதிவுக்கும் பல பேர் பின்னூட்டம் இடுகிறார்கள். அதில் தேவையில்லாத பின்னூட்டங்கள், பெயர் சொல்ல விரும்பாத அனானிமஸ் பின்னூட்டங்கள் என பல பின்னூட்டங்கள் நமக்குத் தொல்லை கொடுப்பதகாவும் அமையலாம். இதில் நம்மை ஊக்கப்படுத்தி உற்சாகப்படுத்தி வரும் பின்னூட்டங்களும் அடங்கும். இப்படி நமக்கு வரும் பின்னூட்டங்களை எப்படி பராமரிப்பது என்று இப்போது பார்க்கலாம். முதலில்
- DASHBOARD
- SETTINGS
- COMMENTS
என்ற இடத்திற்குச் செல்லுங்கள். அதில்
- COMMENTS
- WHO CAN COMMENT
- COMMENT FORM PLACEMENT
- COMMENTS DEFAULT FOR POSTS
- COMMENTS TIME STAMP FORMAT
- COMMENTS FORM MESSAGE
- COMMENTS MODERATION
- SHOW WORD VERIFICATION FOR COMMENTS
- SHOW PROFILE IMAGES ON COMMENTS
- COMMENT NOTIFICATION EMAIL
என்று பின்னூட்டங்கள் சார்ந்தவை இருக்கும். இதில் ஒவ்வொன்றையும் எப்படி பயன்படுத்துவது என பார்க்கலாம்.
1)உங்களின் முந்தைய பதிவுகளில் இதுவரை இருக்கும் பின்னூட்டங்களில் மறைக்கவோ காண்பிக்கவோ COMMENTSஎன்பதனை பயன்படுத்தலாம். ஆனால் இதன் மூலம் நீங்கள் பின்னூட்டங்களை நிரந்தரமாக அழிக்க முடியாது.
2)அனானிமஸ் பின்னூட்டங்களைWHO CAN COMMENT? மூலம் தடுக்கலாம். இதில் registered users என்பதனை தேர்வு செய்து விட்டால் பெயர் சொல்ல விரும்பாத பின்னூட்டங்களை தடுத்துவிடலாம். ஜி-மெயில் கணக்கு உடையவர்கள் மட்டுமே பின்னூட்டங்கள் அளிக்கவேண்டும் என நினைத்தால் users with google accountsஎன்பதை தேர்வு செய்யலாம். அல்லது உங்கள் வலைப்பதிவை பின் தொடர்பவர்கள் மட்டுமே பின்னூட்டம் அளிக்கவேண்டும் என நினைத்தால் only members of this blog என்பதை தேர்வு செய்யலாம்.
3)எந்த இடத்தில் பின்னூட்டப் பெட்டி அமையவேண்டும் என்பதை தீர்மாணிக்க உதவுவதுCOMMENT FORM PLACEMENT. உங்கள் பதிவில் பின்னூட்டப் பெட்டி ஒரு புதிய முழுத்திரையில் தோன்றவேண்டும் எனில் full page என்பதையும், ஒரு சின்னத் திரையில் தோன்றவேண்டும் எனில் pop-up window என்பதனையும், பதிவிற்கு கீழேயே தெரியவேண்டும் எனில் embedded window என்பதனையும் தேர்வு செய்துகொள்ளலாம்.
4)உங்களின் சமீபத்திய பதிவில் பின்னூட்டங்களை அனுமதிக்க அல்லது நிராகரிக்கCOMMENTS DEFAULT FOR POSTS உதவுகிறது. இதில் மாற்றம் ஏதும் செய்ய தேவையில்லை. வேண்டுமென்றால் உங்கள் புதிய பதிவுகளில் பின்னூட்டங்களை நிராகரித்துக்கொள்ளலாம். ஆனால் பழைய பதிவுகளில் பின்னூட்டங்களை இதன்மூலம் நிராகரிக்க முடியாது.
5)பின்னூட்டங்கள் பதிவிடப்பட்ட நேரம் எப்படி தெரியவேண்டும் என்பதை COMMENTS TIME STAMP FORMAT மூலம் தேர்வு செய்யலாம். இதில் கொடுத்துள்ள ஏராளமான மாதிரிகளை பார்த்து நேரத்தின் தோற்றத்தை தேர்வு செய்யலாம்.
6)பின்னூட்டப் பெட்டியின் மேல் "கருத்தை சொல்லிட்டு போங்க" போன்ற வாசகங்களை தோன்ற செய்ய உதவுவது COMMENT FORM MESSAGE. என்ன வாசகம் இடம்பெற வேண்டும் என நினைக்கிறீர்களோ அதனை அங்குள்ள பெட்டியில் எழுதிவிடுங்கள். அந்த வாசகம் உங்கள் அனைத்து பதிவுகளில் உள்ள பின்னூட்ட பெட்டிகளுக்கு மேல் தோன்றும்.
7)உங்களுக்கு வரும் பல பின்னூட்டங்களில் தேவையானவற்றை மட்டும் வெளியிட உதவுவது COMMENT MODERATION. இதில் alwaysஎன்பதை தேர்வு செய்துவிட்டால் பதிவுகளில் வரும் பின்னூட்டங்கள் அனைத்தும் உங்கள் அனுமதிக்கு பின்னரே வெளியிடப்படும். இதன்மூலம் தேவையில்லாத பின்னூட்டங்களை தடுக்கலாம். only on posts older thanஎன்பதை தேர்வு செய்து உங்கள் பழைய பதிவுகளில் வரும் பின்னூட்டங்களை தேவையானவற்றை மட்டும் வெளியிடலாம். இல்லையேல் never என்பதை தேர்வு செய்து வரும் அனைத்து பின்னூட்டங்களையும் வெளியிடலாம்.
இதன் கீழ் இருக்கும் பெட்டியில் இருக்கும் உங்கள் ஈ-மெயில் முகவரியைக் கொடுத்தால் வலைப்பதிவை பின் தொடராதவர் எவரேனும் பின்னூட்டம் இட்டால் உங்களுக்குத் தெரிவிக்கப் படும்.
8)பின்னூட்டம் இடுபவர் மனிதர் தானா என்பதை உறுதிப்படுத்த பிளாக்கர் கொடுத்த வசதியேSHOW WORD VERIFICATION FOR COMMENTS. பின்னூட்டப்பெட்டியின் கீழ் word verification தோன்றவேண்டுமா அல்லது வேண்டாமா என்பதை இதன் மூலம் நீங்கள் முடிவு செய்துகொள்ளலாம்.
9)பின்னூட்டத்தின் அருகில் பின்னூட்டம் இட்டவரின் புகைப்படம் தெரியவேண்டுமா அல்லது வேண்டாமா என்பதை முடிவு செய்ய உதவுவது SHOW PROFILE IMAGES ON COMMENTS. yes அல்லது no என்பதை தேர்வு செய்து இதனை நீங்கள் முடிவு செய்துகொள்ளலாம்.
10)COMMENT NOTIFICATION EMAIL: எவரேனும் பின்னூட்டம் இட்டால் அதை பிறருக்குத் தெரியப்படுத்த உதவுவதே இது. இதில் அதிகபட்சமாக பத்து ஈ-மெயில் முகவரிகளைக் கொடுக்கலாம். கொடுத்தபின் எவரேனும் பின்னூட்டம் இட்டால் அனைத்து முகவரிகளுக்கும் மெயில் மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.
இதில் தேவையான மாற்றங்களை செய்த பின் SAVE SETTINGS என்பதை அழுத்தி மாற்றங்களை சேமித்துக்கொள்ளுங்கள். அவ்வளவுதான்.
Post a Comment