கேள்வி: நான் எக்ஸெல் தொகுப்பில் உருவாக்கும் ஒர்க் புக்குகளை என் கம்ப்யூட்டர் மை டாகுமெண்ட்ஸ் போல்டரில் சேவ் செய்திடாமல், வேறு ஒரு போல்டரில் சேவ் செய்திட வேண்டும். இதனை கம்ப்யூட்டர் தானாக செய்திட என்ன செட் அமைக்க வேண்டும்?
பதில்: எம்.எஸ். ஆபீஸ் கூட்டுத் தொகுப்பில் உள்ள அனைத்து அப்ளிகேஷன் புரோகிராம் களிலும் உருவாக்கப்படும் பைல்கள் அனைத்தும் மை டாகுமெண்ட்ஸ் போல்டரில் சேவ் செய்யும் வகையில் டிபால்ட்டாக (மாறா நிலையில்) செட் செய்யப்பட்டிருக்கும். இதனை நீங்கள் விரும்பும் வகையிலும் மாற்றலாம்.
எக்ஸெல் தொகுப்பினைத் திறந்து அதன் மெனு பார் செல்லவும். இதில் Tools>optins செல்லவும். கிடைக்கும் விண்டோவில் General என்ற டேப்பில் கிளிக் செய்திடவும். இதில் இடது ஓரமாக மூன்றாவது வரியாக Default Locatio என்று ஒரு வரி இருக்கும். அதன் எதிரே My Documents போல்டருக்கான குறிப்பு இருக்கும். அதே போல, நீங்கள் விரும்பும் டைரக்டரி அல்லது போல்டரின் பெயரைச் சரியாக அமைத்து, பின் ஓகே கிளிக் செய்திடவும். இனி அந்த கம்ப்யூட்டரில் யார் எக்ஸெல் தொகுப்பினைக் கையாண்டாலும், அதில் உருவாக்கப்படும் பைல்கள் அனைத்தும் இந்த டைரக்டரியில் தான் சேவ் செய்யப்படும்.
கேள்வி: எம்பி4 பைல் சரியாக எதனைக் குறிக்கிறது என்று சொல்லவும். ஒரு சிலர் எம்பி3 யின் மேம்பட்ட பைல் என்று கூறுகின்றனர். சிலரோ இல்லை அது வீடியோ பைல் என்று கூறுகின்றனர். இது எதனைக் குறிக்கிறது? இதில் அடங்கியுள்ள விஷயம் என்ன என்று விளக்கவும்.
பதில்: சரியான "|a" என்ற கேள்வி. சற்று விரிவாகவே கூறுகிறேன். தொழில் நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. இன்று ஒன்றைப் புரிந்து பயன்படுத்தி இருப்போம். தூங்கி எழுந்தால் இன்னொன்று புதியதாய் புதிய பெயரில் நிற்கிறது. அதைப் போன்றதுதான் எம்பி4. பாடல்களைச் சுருக்கிப்பதிந்து விரித்து ரசிக்க வந்ததுதான் எம்பி3. அதே போல காட்சிகளை கண் முன்னே காட்ட வந்ததுதான் எம்பி4. நீங்கள் கேட்டது போலச் சரியாகச் சொல்வதென் றால் எம்பி4 பைல்கள் சுருக்கப்பட்ட வீடியோ பைல்கள். ஆடல் பாடல் காட்சிகள் இந்த வடிவத்தில் அமைக்கப்படுவதற்கான காரணம் அவற்றைச் சிறியதாக சுருக்கி எளிதாக எடுத்துச் சென்று பயன்படுத்துவதுதான்.
வீடியோ பைல்கள் அதன் ஒரிஜினல் தன்மையில் மிகப் பெரியதாக அமையும். எனவே அதன் ஒரிஜினல் தன்மை மாறாமல் அப்படியே சுருக்கிப் பதிந்து பெறுகையில் அது எம்பி4 வடிவத்தைப் பெறுகிறது. எம்பி4 பைல்கள் எம்பி3 பைல்களைப் போலவே செயல்படுகின்றன. எப்படி எம்பி3 பைல்கள் சுருக்கப்பட்டாலும் அவை கொண்டுள்ள இசையின் தன்மை மாறாமல் இருக்கிறதோ அதே போல எம்பி4 பைல்கள் சுருக்கப்பட் டாலும் அதன் வீடியோ மற்றும் ஆடியோ தன்மை கெடாமல் இருக்கும்.
எம்பி4 என்பது MPEG4 AVC எனவும் அழைக்கப்படும். Advanced Video Coding என்பது இதன் விரிவாக்கம். எம்பி4 பெரும்பாலும் வீடியோவுடன் சம்பந்தப்பட்டதனால் அவை மியூசிக் பைல்களான எம்பி3 பைல்களைக் காட்டிலும் சிறிது குழப்பமிக்கவையாகும். எனவே வீடீயோ பைல் களை சிறப்பான வழிகளில் சுருக்கிப் பதிய வேண்டியதுள்ளது. இந்த பைல்களின் சில தன்மைகளை சிறியதாக மாற்ற வேண்டியதிருக்கும். இவை பெரும்பாலும் இடைவெளி சார்ந்தவையாக இருக்கும்.
இதே போல அசைவுகள் அனைத்தும் வேறுவகையான தொழில் நுட்பம் மூலம் சுருக்கப்படுகின்றன. எனவே பைல் முழுவதும் பலவகையான சுருக்கம் மற்றும் விரித்தல் ஆகியவை பல்வேறு நிலைகளில் மேற்கொள்ளப்படுகின்றன. எம்பி3 பிளேயர் இருப்பதைப் போல எம்பி4 பிளேயர் உள்ளதா? என்ற கேள்வியும் உங்கள் மனதில் எழலாம். ஆம் உள்ளது. எலக்ட்ரானிக் சாதனங்கள் விற்பனை செய்திடும் கடைகளில் விசாரித்து வாங்கிக் கொள்ளுங்கள். அனைத்து தொழில் நுட்பங்களைப் போல எம்பி4 தொழில் நுட்பமும் சாதக பாதகங்களைக் கொண்டுள்ளது.
முதலில் சாதகமான விஷயங்களைப் பார்க்கலாம். எம்பி4 வீடியோ காட்சிகளை டிவிடியின் தன்மையில் சிறப்பாக வெளிக் கொண்டுவர முடியும். 1 எம்.பி.பி.எஸ்.(1 Mbps) அளவிலான வேகத்தில் இயங்கும் இன்டர்நெட் தொடர்பு இதற்கு போதும். எனவே ஒரு சாதாரண எம்பி4 பிளேயரில் இந்த பைல்கள் சிறப்பாக இயங்கும். மேலும் அவை எம்பி3 பைல்களையும் இயக்கும். எம்பி4 தொழில் நுட்பத்திலும் திருட்டுத் தனமாக காப்பி எடுக்கும் வழி உள்ளது. இதனைத் தடுக்கும் திறன் இந்த தொழில் நுட்பத்திடம் இல்லை.
கேள்வி: நான் வேர்ட் 2003 பயன்படுத்துகிறேன். நீங்கள் முன்பு ஒரு முறை குறிப்பிட்டது போல ரூலர் வேண்டி வியூ மெனு சென்று ரூலர் என்பதில் கிளிக் செய்தேன். ஆனால் இடது பக்கம் நெட்டு வாக்கில் ரூலர் கிடைக்கவில்லை. இதற்கு என்ன செய்வது? எந்த மெனு சென்றால் கிடைக்கும்? லெட்டர் ஹெட் போன்றவற்றைத் தயாரிக்க இடது பக்க ரூலரும் தேவைப்படுகிறது.
பதில்: உங்களுடைய வியூ மெனுவில் Normal வியூவினை நீங்கள் தேர்ந்தெடுத்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இந்த வகை வியூவில் பக்கத்தின் மேலாக படுக்கை வசத்தில் மட்டுமே ரூலர் கிடைக்கும். இதே மெனுவில் ரூலர் என்பதில் கிளிக் செய்திருந்தாலும் மேலே மட்டுமே காட்டப்படும். இதே போல ஹெடர் மற்றும் புட்டர் பிரிவுகளையும் பார்க்க முடியாது. அதற்குப் பதிலாக வியூ மெனுவில் Print Layout என்ற பிரிவில் கிளிக் செய்தால் மேலே சொன்ன அனைத்தும் காட்டப்படும். இடது பக்கமும் ரூலர் தெரியும். லெட்டர் ஹெட் மட்டும் அல்ல, பலவகைகளில் நம் டெக்ஸ்ட்டை வடிவமைக்க இந்த இடது பக்க ரூலர் உங்களுக்கு உதவும்.
கேள்வி: என் வகுப்பு மாணவர்கள் பற்றிய குறிப்புகளை அவர்கள் மதிப்பெண்களுடன் போட்டு ஒரு ஒர்க்புக் எக்ஸெல் தொகுப்பில் வைத்துள்ளேன். இந்த குறிப்புகளையும் மதிப்பெண்களையும் டெக்ஸ்ட்டாக ஒரு வேர்ட் பைலுக்குக்கொண்டு சென்று ஒரு புதிய பைலை உருவாக்க முடியுமா?
பதில்: தாராளமாக மாற்றலாம். உங்கள் ஒர்க் புக்கில் வேறு ஏதேனும் பார்முலாக்கள், சார்ட்டுகள் வைத்திருக்கிறீர்களா என்று எழுதவில்லையே. ஏனென்றால் டெக்ஸ்ட்டாக மாற்றுகையில் அவை எல்லாம் காணாமல் போய்விடும். ஆனால் எக்ஸெல் பைல் அப்படியே இருக்கும். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது:
1) டேட்டா உள்ள எக்செல் பைலைத் திறந்து கொள்ளுங்கள்.
2) File=>Save As அண் கட்டளையைக் கொடுங்கள்.
3) Save as type என்ற டிராப்-டவுன் லிஸ்ட்டை கிளிக் செய்து அங்கு உள்ள பிரிவு களில் Formatted text அல்லது Textஅல்லது CSV என்பதில் ஒன்றைத் தேர்ந்தெடுங்கள். இகுங என்பது Separated value என்று பொருள்படும்.
4) பைலிற்கு ஏதாவது பெயரை டைப் செய்து விட்டு Save பட்டனை அழுத்துங்கள்.
கேள்வி: சிடி அல்லது டிவிடியில் எழுதி முடித்தவுடன் ஐ.எஸ்.ஓ. இமேஜ் சேவ் செய்திடவா என்று ஒரு கேள்வி கேட்கப்படுகிறது? இது எதனைக் குறிக்கிறது? கட்டாயம்சேவ் செய்திட வேண்டுமா?
பதில்: பலரின் மனதில் வழக்கமாக எழுந்து வரும் சந்தேகத்தினை நீங்கள் கேள்வியாக்கி அனுப்பி வைத்துள்ளீர்கள். நன்றி. ஐ.எஸ்.ஓ. இமேஜ் என்பது ஐ.எஸ்.ஓ. பைலைக் (.iso) குறிக்கிறது. டிஸ்க் இமேஜ் அல்லது ஆப்டிகல் இமேஜ் என்பதற்கான இன்னொரு பெயர் தான் ஐ.எஸ்.ஓ. இமேஜ். ஏற்கனவே உள்ள பைல்களுக்கான இமேஜ்தான் இது. அதனால் தான் சிடி மற்றும் டிவிடி பர்னிங் உடன் இது இணைந்து பேசப்படுகிறது. ஐ.எஸ்.ஓ. பைல் இதற்கான ஸ்பெஷல் சாப்ட்வேர் மூலம் சிடியில் உள்ள பைல்கள் அனைத்திற்குமான காப்பி ஆக உருவாக்கப்படுகிறது. இதன் மூலம் சிடியில் உள்ள பைல்களை எடிட் செய்திடலாம். எனவே மியூசிக் சிடி ஒன்றை நீங்கள் உருவாக்குகையில் அதற்கான ஐ.எஸ்.ஓ. இமேஜ் ஒன்றும் உருவாக்கப்படுகிறது. மியூசிக் மட்டுமின்றி சிடியில் என்ன தகவல்களை எழுதினாலும் அந்த பைல்களுடன் கூடிய சிடியின் ஐ.எஸ்.ஓ. இமேஜ் பைலும் உருவாக்கப்படுகிறது. இதனை எந்த பர்னிங் சாப்ட்வேர் தொகுப்பின் மூலமும் உருவாக்கலாம். இதற்கான பர்னிங் சாப்ட்வேர் கம்ப்யூட்டருடனேயே கொடுக்கப்பட்டிருக்கலாம். அல்லது சிடி டிரைவ் வாங்குகையில் தரப்பட்டிருக்கலாம். அல்லது நீங்களே தேர்ட் பார்ட்டி சாப்ட்வேர் எதனையாவது வாங்கியிருக்கலாம்; அல்லது டவுண்லோட் செய்திருக்கலாம். எந்த வகை சாப்ட்வேர் புரோகிராம் என்றாலும் அதன் மூலம் நிச்சயம் ஐ.எஸ்.ஓ. பைல் கிடைக்கும்.
கேள்வி: என்.மகன் எனக்கு சோனி லயோ லேப்டாப் ஒன்று வாங்கித் தந்துள்ளார். லேட்டஸ்ட்டான இதில் அனைத்தும் மிகப் பெரிய அளவில் உள்ளது. ஆனால் இதில் உள்ள விஸ்டா சிஸ்டம் எனக்குப் பிடிக்கவில்லை. பழக்கமில்லை. இதற்குப் பதிலாக நானே விண்டோஸ் எக்ஸ்பிபுரபஷனல் ஆப்பரேட்டிங் சிஸ்டம் போட்டுக் கொள்ள முடியுமா?
பதில்: விஸ்டா பிரபல மாகாததற்கு இதைப் போன்ற சில சிக்கல்கள் கார ணம். அது மட்டு மின்றி பல சிறிய சாப்ட் வேர் புரோகிராம்கள் விஸ்டாவில் இயங்காது. எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை அதன் ஒரிஜி னல் டிவிடி சிடி கொண்டு போட்டு கொள்ளலாம். ஆனால் அதில் ஒரு சிக்கல் உள்ளது. உங்களுடைய கம்ப்யூட்டருக்கு நிச்சயம் ஒன்று அல்லது மூன்று ஆண்டுகள் வாரண்டி தரப்பட் டிருக்கும். இந்த விஸ்டா ஆப்பரேட்டிங் சிஸ்டம் அதன் ஒரு பகுதியாக இருக்கும். எனவே நீங்களாக ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை மாற்றினால் நிறுவனம் உங்களுக்குத் தரப்பட்டுள்ள வாரண்டியை ரத்து செய்துவிடும். எனவே எங்கு வாங்கப்பட்டதோ அந்த நிறுவனம் அல்லது சோனியின் அத்தாட்சி பெற்ற கடையில் சென்று உங்களுடைய விருப்பத்தினைத் தெரிவித்து அவர்களையே மாற்றித் தரச் சொல்லுங்கள். எக்ஸ்பி தொகுப்பிற்கு பணம் செலுத்தச் சொல்லலாம்.
கேள்வி: என்னுடைய மொபைல் போன் சோனி எரிக்சன் டபிள்யூ 810 ஐ. இதனுடன் மெமரி கார்ட் ஒன்று கொடுத்தார்கள். நான் அதிகம் பாடல்களையும் போட்டோக்களையும் வைத்துள்ளதால் இடம் போதவில்லை. இந்த கார்டுக்குப் பதிலாக உயர்ந்த மெமரி கொண்ட கார்டைப் பயன்படுத்தலாமா?
பதில்: கூடுதல் மெமரி கொண்ட கார்டைப் போடலாம். நீங்கள் குறிபிட்டுள்ள சோனி போன் 2 ஜிபி கார்ட் வரை தாங்கும். ஆனால் அந்த அளவிற்குப் போடுகையில் போனின் செயல்பாட்டில் சிறிது வேகம் குறையும். இந்த குறைவான வேகம் அவ்வளவாக நாம் உணரும் வகையில் இருக்காது. எனவே இந்த போனில் பொருந்தும் கார்டாகப் பார்த்து வாங்கி பயன்படுத்தவும். பழைய கார்டில் உள்ளதை கம்ப்யூட்டருக்கு மாற்றிப் பின் புதிய கார்டுக்கு மாற்றிக் கொள்ளலாம்.
கேள்வி: மானிட்டர் ஸ்கிரீனில் கீழாக உள்ள டாஸ்க் பாரினை நாம் மவுஸைக் கொண்டு சென்றால் மட்டும் தெரியும்படி அமைப்பது எப்படி?
பதில்: மிக எளிதான வேலைதான். செட் அப் செய்திடும் வகையில் சில ஸ்டெப்ஸ் மேற்கொள்ள வேண்டும். பார்க்கலாமா! டாஸ்க் பாரில் வெற்றிடமாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்திடவும். அதில் விரியும் மெனுவில் “propertise”என்ற பிரிவில் கிளிக் செய்திடவும்.
பின் கிடைக்கும் மெனுவில்Autohide அல்லதுAutohide taskbar என்ற கட்டத்திற்கு எதிராக டிக் மார்க் செய்திடவும். இப்போது டாஸ்க் பார் உள்ள இடத்தில் மவுஸைக் கொண்டு செல்லும் வேளைகளில் மட்டும் டாஸ்க் பார் மேலே காட்டப்படும். மற்ற நேரங்களில் திரையில் டாஸ்க் பார் தோன்றாது. மீண்டும் பழையபடி எப்போ தும் டாஸ்க் பார் வேண்டுமென்றால் மேலே சொன்ன இடத்திற்குச் சென்று அந்த டிக் அடையாளத்தை எடுத்துவிட்டால் போதும்.
கேள்வி : எங்கள் ஊரில் கம்ப்யூட்டர் செய்து கொடுப்பவரிடம் புதிய அதிக திறன் கொண்ட கம்ப்யூட்டர் ஒன்றை வாங்கி, அதில் எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பு ஒன்றையும் பெற்றுள்ளேன். மற்ற என் நண்பர்கள் இதற்கு புராடக்ட் கீ வாங்கினாயா என்று கேட்கிறார்கள். அது தேவை இல்லை என எனக்குக் கம்ப்யூட்டர் கொடுத்தவர் கூறுகிறார். இது எதனைக் குறிக்கிறது? அவசியம் தேவையா?
பதில்: தங்களின் சாப்ட்வேர் தொகுப்பு திருடப்பட்டு பயன் படுத்தப்படாமல் இருக்க, சாப்ட்வேர் நிறுவனங்கள் பயன்படுத்தும் பல வழிகளில் இந்த புராடக்ட் கீயும் ஒன்று. மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் சாப்ட்வேர் தொகுப்புகளுக்கு இந்த புராடக்ட் கீயினை வழங்கு கிறது. ஒவ்வொரு சாப்ட்வேர் தொகுப் பிற்கும் ஒரு கீ ஒன்றை உருவாக்கி அதனைச் சரியாகக் கொடுத்தாலே அத்தொகுப்பு இயங்கும் வண்ணம் அமைக்கப் பட்டிருக்கும். இந்த சாப்ட்வேர் தொகுப்பினைப் பணம் கொடுத்து வாங்குகையில் பொதுவான ஒரு கீ அதில் அச்சடிக்கப்பட்டுத் தரப்படும். இதனை சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்யப்படுகையில் பயன்படுத்த வேண்டும்.
அதன்பின் அந்த தொகுப்பைப் பயன்படுத்த நாம் மேற் கொள்ளும் முதல் முயற்சியில், புராடக்ட் கீ கேட்கும். அப்போது சாப்ட்வேர் வழங்கிய நிறுவனத்தின் இணைய தளத்தில் சென்று அதனைப் பெற்றுக் கொள்ளலாம். அல்லது இமெயில் மூலம் பெறலாம். அல்லது கட்டணமின்றி பயன்படுத்தக் கூடிய தொலைபேசி எண் தந்திருப்பார்கள். அதனைத் தொடர்பு கொண்டு நம் சிடி எண்ணைத் தந்தால் புராடக்ட் கீ தருவார்கள். பொதுவாக இந்த கீ பல எண்கள் மற்றும் எழுத்துகள் கொண்டதாக இருக்கும். எனவே கவனமுடன் கேட்டு வாங்கி சிஸ்டத்தில் அமைக்க வேண்டும். உங்களுக்கு கம்ப்யூட்டர் கொடுத்த நபர் அல்லது நிறுவனத்தில் பணிபுரிபவர் ஏற்கனவே இந்த வேலையை எல்லாம் செய்து முடித்து உங்களுக்கு எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பினைப் பதிந்து தந்திருப்பார். இருப்பினும் அவரிடம் சிடிக்கான கீயினைப் பெறுவது நல்லது. பின் நாளில் புதிய கம்ப்யூட்டரில் எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பைப் பதிக்கை யில் உதவும். அல்லது பதியப் பட்ட ஹார்ட் டிஸ்க்கினை ரீ பார்மட் செய்த பின் பதிக்கையிலும் தேவைப்படும்.
கேள்வி: இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 7 ஐ தொடர்ந்து இன்னும் நான் பயன்படுத்தி வருகிறேன். வெகுநாட்களாக இந்த சந்தேகம் என்னிடம் உள்ளது. ஏன் அதனை மூடும்போது அடுத்த முறை இதனைத் திறக்கையில் அனைத்து டேப்களையும் திறக்கவா என்று ஒரு கேள்வி வருகிறது? இது எர்ரர் செய்தியா? எர்ரர் என்றால் இதனை எப்படி சந்திப்பது?
பதில்: புதிதாய் இயக்கத்தில் உள்ள பிரவுசர்கள் அனைத்துமே டேப் பிரவுசிங் எனப்படும் வசதியைத் தருகின்றன. இப்படி பல டேப்களைத் திறந்து, அவற்றின் ஒவ்வொன்றிலும் ஓர் இணைய தளத்தினைப் பார்த்துக் கொண்டிருந்து விட்டு மூடுகிறோம். சில வேளைகளில் நம்மை அறியாமல் மூடுவதற்கான எக்ஸ் அடையாளத் தை அழுத்திவிடுவோம். அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் நம்மை எச்சரிக்கை செய்வதற்காக இந்த ஏற்பாடு உள்ளது. அனைத்து டேப்களையும் சேவ் செய்து பின் அடுத்த முறைத் திறக்கையில் அந்த டேப்களில் உள்ள தளங்களையும் இது திறக்கும்.
இப்படிப்பட்ட செய்தி வருவது உங்களுக்குப் பிடிக்க வில்லை என்றால், அதனை நிறுத்தும் வகையில் செட் செய்துவிடலாம். முதலில் "Tools" தேர்ந்தெடுத்து அதில் "Internet Options" பட்டன் அழுத்தவும். பின்னர் பல டேப்கள் அடங்கிய விண்டோ கிடைக்கும். இதில் "General" என்ற டேபை அழுத்தவும். இதில் நான்காவதாக உள்ள "Tabs" என்ற பிரிவில் கிடைக்கும் "Settings" என்ற பட்டனை அழுத்தவும். இப்போது "Tabbed Browsing Settings" என்ற டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில்"Warn me when closing multiple tabs" என்ற வரிக்கு முன்னால் உள்ள சிறிய கட்டத்தில் இருக்கும் டிக் அடையாளத்தின் மீது மவுஸ் கர்சரை வைத்து அழுத்தி எடுத்துவிடவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி இந்த எச்சரிக்கை கிடைக்காது.
கேள்வி: இணைய தளம் ஒன்றில் என் பெயரைப் பதிந்த போது நான் கொடுத்த பாஸ்வேர்ட் Weak Passwordஎன செய்தி தரப்பட்டது. பாஸ்வேர்டில் எப்படி Weak உண்டு. ஸ்ட்ராங் பாஸ்வேர்ட் எப்படி உருவாக்க முடியும்?
பதில்: Weak Password என்பது சுலபமாக மற்றவர்கள் அடையாளம் காணக் கூடியதாகும். எடுத்துக் காட்டாக, உங்கள் பிறந்த நாள், திருமண நாள், மனைவியின் பெயர், ஊரின் பெயர், qwerty, 1234 என்றெல்லாம் கொடுத்தால் எளிதாக ஒருவர் கண்டு கொள்ளலாமே. எனவே தான் யாரும் கண்டறியாத வகையில் பாஸ்வேர்டை அமைக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. ramukavis என உங்கள் பெயரை வலமிருந்து இடதாக அமைத்தால் கூட ஒரு சிலர் எளிதில் கண்டுபிடித்து விடுவார்கள். எனவே தான் பாஸ் வேர்டில் எண்களும், எழுத்துக் களும், பிற குறியீடுகளும் கொண்டு அமைத்தால் அது ஸ்ட்ராங் பாஸ்வேர்ட் எனக் கூறுகிறார்கள். அவ்வாறு அமைக்கும்படி கம்ப்யூட்டர் பயன்பாடு குறித்த அனைத்து இதழ்களும் அறிவுறுத்துகின்றன.
உங்கள் கேள்வியைப் படிக்கும் போது நேற்று நான் இணையத்தில் படித்த குறிப்பு நினைவிற்கு வந்தது. அண்மையில் 28 ஆயிரம் பாஸ்வேர்ட்களை மாதிரிக்கு எடுத்து ஆய்வு ஒன்றை நடத்தினார்கள். இதில் 16% பேர் தங்கள் பெயரின் முதல் சொல்லையே பாஸ்வேர்டாகப் பயன்படுத்தி வருகின்றனர். 14% பேர் மிக எளிமையாக 1234 போன்ற பாஸ்வேர்டினைக் கொண்டுள்ளனர். 5% பேர் டிவியில் நடத்தப்படும் சீரியல் தலைப்புகள், அதில் வரும் கதா பாத்திரங்களின் பெயர்களைக் கொண்டு அமைத்துள்ளனர். மொத்தத்தில் 42% பேர் மிக எளிதான, யாரும் கண்டு கொள்ளக் கூடிய பாஸ்வேர்ட் களையே பயன்படுத்துகின்றனர் என்பது தெரிய வந்தது. 66% பேர் தங்கள் பாஸ்வேர்ட்களை மாற்றுவதே இல்லை என்றும் தெரிகிறது. இவை அனைத்துமே சரியல்லை. வங்கிக் கணக்கு போன்றவற்றில் மிகக் கடுமையான, யாரும் அணுக முடியாத பாஸ்வேர்ட் களை வைத்திருப்பதே நல்லது.
கேள்வி: விண்டோஸ் எக்ஸ்பி என் சிஸ்டத்தில் உள்ளது. இதில் மை கம்ப்யூட்டர் ஐகானில் கிளிக் செய்து பின் டிரைவ் ஐகானைத் தேர்ந்தெடுத்து, பைல்களைப் பார்ப்பது வழக்கம். ஆனால் மை கம்ப்யூட்டர் ஐகானில் கிளிக் செய்தவுடன், டிரைவ் ஐகான்கள் மற்றும் அவை கொண்ட திரை கிடைக்க தாமதமாகிறது. இதனை வேகமாகக் கிடைக்கும்படி செய்திட முடியுமா?
பதில்: உங்கள் சந்தேகம் சரியானதுதான். வேகமாக நம் வேலையை முடிக்க வேண்டும் என எண்ணி மை கம்ப்யூட்டரைக் கிளிக் செய்தால், நமக்கு வர வேண் டிய முதல் திரை தாமதமாக வந்தால் ஏமாற்றமாகத்தான் இருக்கும். இது ஏன் ஏற்படு கிறது என்றும், இதனை எப்படி சரி செய்திடலாம் என்றும் பார்க்கலாம்.
பிரவுஸ் செய்து பைல்களைத் தேடுவதற்காக, மை கம்ப்யூட்டர் ஐகானைக் கிளிக் செய்தவுடன், விண்டோஸ் எக்ஸ்பி உடனே அதன் நெட்வொர்க் பைல் களையும், கம்ப்யூட்டரில் இணைக்கப்பட்டுள்ள பிரிண்டர்களையும் தேடி அறிந்து கொள்ள முயற் சிக்கும். இதனால் தான் அந்த திரையில் உடன் கிடைக்க வேண்டிய ஐகான்கள் வர சற்று தாமதமாகிறது. முதல் தோற்றத்தில் டிபால்ட்டாக உள்ள விண்டோஸ் ஐகான் கிடைக்கும். பின் சற்று நேரத்தில் மற்ற ஐகான்கள் கிடைக்கும். இதனைத் தவிர்க்கக் கீழ்க்காணும்படி செட் செய்திடவும்.
1. முதலில் My Computer ஐகானில் டபுள் கிளிக் செய்து அதனைத் திறக்கவும்.
2.பின் Tools மெனுவில் கிளிக் செய்து, அந்த மெனுவில் [size=12]Folder Options [/size] என்ற பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும்.
3. Folder Options என்பதன் கீழ் View என்னும் டேபினைத் தேர்ந்தெடுக்கவும்.
4. அதில் உள்ள முதல் பாக்ஸில் "Automatically search for network folders and printers" என்று இருக்கும் இடத்தில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்து விடவும். அதன் பின் Apply என்பதில் கிளிக் செய்து, OK யில் என்டர் தட்டி வெளியேறவும். இதன்பின் உங்கள் மை கம்ப்யூட்டர் திரை தோன்றுவது மிக வேகமாக நடைபெறும்
Post a Comment