Ads (728x90)

நபிகளார் குறித்த கட்டுரைப் போட்டியில் பௌத்த தேரர் முதலிடம்
 
மனித நேயத்தால் உலகை வென்ற நபிகள் நாயகம் என்ற தலைப்பிலான கட்டுரை போட்டியில் பௌத்த தேரரொருவர் முதலிடத்தை பெற்றுள்ளார்.
சமய கலாசார கல்விக்கான மன்றம் மனித நேயத்தால் உலகை வென்ற நபிகள் நாயகம் என்ற தலைப்பில் சிங்கள மொழி பேசும் முஸ்லிம் அல்லாதவர்கள் மத்தியில் நடத்திய கட்டுரை போட்டியொன்றை நடத்தியது. இப்போட்டியில்  மதிப்புக்குரிய கசிம தேரர் முதலிடத்தை பெற்றுக்கொண்டார்.

இதன் பரிசளிப்பு நிகழ்வு அண்மையில் இலங்கை பத்திரிகை ஸ்தாபன  கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

சமய, கலாசார கல்விக்கான மன்றத்தின் தலைவர் எம்.எம்.ஏ. தஹ்லான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் தலைவர் என்.எம். அமீன், அஷ்ஷெய்க் உவைஸ் உட்பட பலர் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினர். 

இக்கட்டுரைப் போட்டியில் முதலிடத்தைப் பெற்றுக்கொண்ட மதிப்புக்குரிய  கசிம தேரர் உள்ளிட்ட நாடாளாவிய ரீதியிலான வெற்றியாளர்களுக்கு இதன்போது பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் உரையாற்றிய  மதிப்புக்குரிய சுசிம தேரர்,

"ஒவ்வொரு மாணவனும் ஏனைய மதங்களை பற்றி அறிந்து கொள்ளும் வகையில் பாடசாலை புத்தகங்களில் ஏனைய மதங்கள் தொடர்பான விபரங்கள் சேர்க்கப்பட வேண்டும்.

அப்போது தான் நாட்டில் நிரந்தர சமாதானம் உருவாக முடியும். இது காலம் கடத்தாது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்" என்றார்.

தகவல்கள்:- http://www.tamilmirror.lk

Post a Comment